உள்ளூர் செய்திகள்

ஸ்வாமு... ஸ்வாபி....

எல்லோரது கைக்கும் மொபைல் போன் வந்துவிட்டது. கைக் கடிகாரம் காணாமலே போச்சு. ஸ்மார்ட் வாட்சுக்கு (Smart Watch) முன், ஸ்மார்ட் வாட்சுக்குப் பின் என காலத்தைப் பிரித்துவிடலாம் போல இருக்கிறது! (அதுதான் 'ஸ்வாமு' 'ஸ்வாபி'!)ஸ்மார்ட் வாட்ச் என்பது 'கையில் அணிந்து கொள்ளக்கூடிய கணினி' போன்றது. ஒருவகை டிஜிட்டல் (Digital) கைக்கடிகாரம். பொதுவான கைக்கடிகாரங்களை விட அதிக பயன்பாடுகளைக் கொண்டது.இந்தக் கடிகாரம், வைஃபை (Wi-Fi) அல்லது புளூடூத் (Bluetooth) மூலமாக நம் அலைபேசியுடன் இணைந்து இயங்கக் கூடியது. இணைக்கப்பட்ட அலைபேசியைக் கையில் வைத்துக்கொள்ள வேண்டியது இல்லை. இதில் உள்ள பேட்டரி (Battery) 18 மணி நேரம் வரைகூடச் செயல்படும். ஸ்மார்ட் வாட்சின் மூலம், குறுஞ்செய்திகள் அனுப்புவது, படிப்பது போன்றவற்றைச் செய்யலாம். அலைபேசிக்கு வரும் அழைப்புகளுக்குப் பதில் பேசலாம். இதயத் துடிப்பின் வேகத்தைத் தெரிந்துகொள்ளலாம். பேச்சுக்களைப் பதிவு செய்யலாம். மேப் (Map) பார்க்கலாம். மின் அஞ்சல்களைப் பார்வையிடலாம். இருக்கும் இடத்தினை நண்பர்களுக்குத் தெரிவிக்கலாம்… சின்ன வாட்ச்… எவ்வளவு வசதிகள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !