உயிரின் தூரிகை: ஈஸ்ட்டுக்குப் பொருந்தாதது எது?
ஈஸ்ட்டுகளைப் (Yeasts) பற்றிக் அருகே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.1. அ. பூஞ்சைஆ. ஒரு செல்இ. இழை அமைப்புஈ. யூகேரியாட்2. அ. மொட்டு விடுதல்ஆ. பாலிலாஇ. தாய்ச் செல்ஈ. இரு பிளவு3. அ. நொதித்தல்ஆ. கார்பன்இ. ஆல்கஹால்ஈ. ஒளிச்சேர்க்கை4. அ.பெப்டிடோகிளைக்கன்ஆ. கைட்டின்இ. உட்கருஈ. செல் சவ்வு5. அ. ரொட்டிஆ. பூச்சிக் கொல்லிஇ. மதுபானம்ஈ. வைட்டமின்விடைகள்:1. இ) இழை அமைப்பு. மற்றவை மற்ற பூஞ்சைகளுக்குப் பொருந்தும்.2 .ஈ) இரு பிளவு. இது பாக்டீரிய இனப்பெருக்கம். மற்றவை ஈஸ்ட் இனப்பெருக்க முறைகள்.3. ஈ) ஒளிச்சேர்க்கை. இது தாவர செயல்பாடு. மற்றவை ஈஸ்ட் செயல்பாடுகள்.4. அ) பெப்டிடோகிளைக்கன். இது பாக்டீரிய செல்சுவர். மற்றவை ஈஸ்டின் பாகங்கள்.5. ஆ) பூச்சிக் கொல்லி. மற்றவை ஈஸ்டினால் கிடைக்கும் பொருட்கள்.