பூமியின் எதிர்காலம்?
இயற்கைச் சூழல் மாற்றங்கள் காரணமாகவும், கோள்கள் சுற்றுப்பாதையில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களின் விளைவாகவும் பூமியில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எதிர்காலத்தில் பூமியின் நிலை என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பூமியின் எதிர்காலம் சூரியனைச் சார்ந்து உள்ளது. சூரியனுடைய உட்கருவில் சேர்ந்து வரும் ஹீலியம் வாயு காரணமாக, அதன் ஒளிர்வுத் தன்மை மெல்ல அதிகரிக்கும். சூரியனின் ஒளிர்திறன் அடுத்த நூறு கோடி வருடங்களில் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக புவியை அதிக கதிர்வீச்சு வந்து சேரும். இது கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்கி நீர்ப்பரப்பளவு குறைதல் போன்ற இயற்கைக்கு மாறான மோசமான சூழல்களையும், விளைவுகளையும் ஏற்படுத்தும். புவியின் மேற்பரப்பு அதிக வெப்பமடைவதால் வளி மண்டலத்தில் தாவரங்களுக்குத் தேவையான கரியமில வாயு குறையும். தாவரங்கள் அழிவதால் அது வெளியிடும் ஆக்சிஜன் அளவு குறையும். இதன் மூலம் உயிரினங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும். நாம் வாழும் சூழலைப் பாதுகாப்பதன் மூலமும், வனப்பகுதியின் அளவை அதிகரிப்பதன் மூலமாகவும் இந்த அச்சுறுத்தல்களைத் தவிர்க்கலாம்.