வாயில்லா ஜீவன்களின் சுமையைக் குறைப்போம்
கிரேக்க நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் சாண்டோரினி (Santorini) தீவும் ஒன்று. இங்கிருக்கும் குறுகலான, செங்குத்தான பாதைகளில் கழுதை மூலம் சவாரி செய்வது பிரசித்தி பெற்றது. இச்சவாரிக்கு சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே, கழுதைகளுக்குச் சுமை அதிகரித்தது. கழுதைகள் துன்புறுத்தப்படுவதை அறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், கண்டனம் செய்தனர். இதைத் தொடர்ந்து. இனி ஒரு கழுதையின் மேல் ஒரு சமயத்தில் அதிகபட்சம் 100 கிலோ (220 பவுண்டு) எடை மட்டுமே ஏற்றலாம் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கழுதைகளுக்கு போதிய உணவும், நீரும், ஓய்வும் அளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.