உள்ளூர் செய்திகள்

நீச்சல் தெரிந்தால்தான் பட்டம் வாங்க முடியும்!

மாணவர்களுக்கு நீச்சல் தெரிந்தால் தான், பட்டமளிக்க முடியும் என்று, சீன நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று அதிரடியாக அறிவித்துள்ளது. சீனாவின் பிரபல பல்கலைக்கழகமான சிங்குவா (Tsinghua University) பல்கலைக்கழகத்தில்தான், இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்விப் பிரிவுத் தலைவரான, லியூ போ கூறுகையில், “இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 50 மீட்டர் தூரம் நீந்திக் காட்ட வேண்டும். தவறினால், பட்டம் பெறுவதற்கு முன்பு நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், பல்கலைக்கழகம் அவர்களுக்கு பட்டம் வழங்காது. நீச்சல் என்பது உடல் திறனை மட்டுமல்ல; வாழ்க்கைத் திறனையும் மேம்படுத்த உதவும்.” என்று தெரிவித்துள்ளார். 90 ஆண்டுகளுக்கு முன், இதே பல்கலைக்கழகத்தில், நீச்சல் கட்டாயப் பாடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !