உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / ஊனத்தை வென்ற தடகள வீரரர்கள்

ஊனத்தை வென்ற தடகள வீரரர்கள்

ஊனமுற்றவர்களுக்கான உற்சாக திருவிழா என்றே இதனைச் சொல்லலாம்.அந்த அளவிற்கு உடல் ஊனமுற்றவர்களுக்காக நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளிடம் ஆர்வமும் சந்தோஷமும் பொங்கிவழிகிறது.சென்னை நேரு ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான பாரா சாம்பியன்ஷிப் அதாவது உடல் ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.நாடு முழுவதிலும் இருந்து 1,476 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல்,வட்டெறிதல்,ஒட்டம்,நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதால் என்று 155 போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டிகளில் பங்கேற்று வீரர்கள் தத்தம் திறமையை வெளிப்படுத்திய விதம் பார்க்க பெருமையாக இருந்தது அதிலும் பார்வை இல்லாதவர்கள் நீளம் தாண்டுதல் மற்றும் வட்டெறிதல் போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை காட்டிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.பொதுவாக மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் பாராமாக இருக்க விரும்புவது இல்லை அவர்களுக்கான வாழ்வியலை கற்றுக் கொடுத்துவிட்டாலோ அல்லது கைகாட்டிவிட்டாலோ அவர்கள் தத்தம் வாழ்க்கையை தாங்களே பார்த்துக் கொள்வர் அவர்களை இது போன்ற விளையாட்டுப் போட்டிகளின் பக்கம் திருப்பிவிட்டால் போதும் இன்னும் சிறப்புடன் பரிணமளிப்பர்.யாரிடம் எந்த திறமை இருக்கிறது என்பதே தெரியாது தங்களுக்குள் இருக்கும் அழுத்தத்தை இது போன்ற போட்டிகளின் மூலம் வெளிப்படுத்தி அதற்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் அவர்கள் இதில் மேலும் மேலும் சாதனை படைக்கத்தயராகிவிடுவர் குடும்பத்தில் நார்மலாக உள்ள உறுப்பினர்களை விட பொருளாதாரத்தில் பலம் கொண்டவர்களாக மாறுவர்.வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களும் பல லட்சம் ரொக்கப் பரிசுகளும் கிடைக்கிறது,மத்திய மாநில அரசுகள் நன்றாக ஊக்கம் தருகிறது.இது போன்ற போட்டிகளை பார்ப்பதும் பங்கேற்பதும் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை நிச்சயம் மாற்றிப்போடும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !