UPDATED : அக் 09, 2024 05:22 PM | ADDED : அக் 09, 2024 05:18 PM
இன்னமும் மலையெங்கும் கோவிந்தா..கோவிந்தா...கோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.பெருமாள் தனக்கு பிரியமான கருட வாகனத்தில் உலா வருவதைக் காண திரண்ட பல லட்சம் பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோஷம் திருமலையே அதிரவைத்தது.
திருமலையில் நடந்துவரும் ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையில் பெருமாள் வருவது முக்கிய நாளாகும்.
அவருக்கு பிரியமான கருட வாகனத்தில் உலா வருகிறார் என்பதுடன் அன்றைய தினம் மூலவர் அணிந்திருக்கும் நகைகளை அணிந்து வருவார் என்பதால் மூலவரான சீனிவாசப்பெருமாளே தங்களைக் காணநேரில் வருவதாக பக்தர்கள் மனதில் நினைத்து பெரியளவில் கூடுவர்.,நேற்றும் அப்படியே கூடினர்.
மாடவீதிகள் எங்கும் நிறைந்திருந்த பக்தர்கள் மனம் மகிழும்வண்ணம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.