UPDATED : நவ 18, 2024 07:21 PM | ADDED : நவ 18, 2024 07:18 PM
கடந்த 17 வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டு 16 ஆயிரம் உறுப்பினர்களுடன் வீறு நடைபோட்டுக் கொருப்பதுதான் 'ஐஸ் ஆப் மெட்ராஸ்' (மெட்ராஸின் கண்கள்) போட்டோகிராபி அமைப்பு.
இந்த அமைப்பில் சேர எந்தக் கட்டணமும் இல்லை,பள்ளியில் படிப்பவர்கள் முதல் எந்த வயதினரும் இந்த அமைப்பில் சேரலாம்,புகைப்படம் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.
மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உறுப்பினர்கள் படமெடுக்கச் செல்வர்.இப்படி எடுத்த படங்களைக் கொண்டு வருடம் ஒரு முறை புகைப்படக் கண்காட்சி நடத்திவருகின்றனர்.
ஆறாவது முறையாக சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட் ஹவுசில் வருகின்ற டிசம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.காட்சிக்கு வந்த 1300 படங்களில் இருந்து தேர்ந்து எடுத்த 161 படங்கள் மட்டுமே கண்காட்சியில் வைக்கப்படுகிறது.அனுமதி இலவசம்.
கண்காட்சி பற்றி கூடுதல் விவரமறிய தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:Ramaswamy Nallaperumal gmail.com, 9444062684G.V. Balasubramanian gmail.com. 9884349584V.Harihara Subramanian gmail.com, 9445416821Naveen Kumar m.k.gmail.com, 9940013232