ஸ்ரீ கீதா பவன் டிரஸ்ட் சார்பில் ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை கோபாலபுரத்தில் உள்ள கீதா பவனில் நடந்துவரும் ஜென்மாஷ்டமி விழாவினை முன்னிட்டு கிருஷ்ணர் வாழ்க்கை ஒலி ஒளிக்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக இருபதிற்கும் மேற்பட்ட சிற்றரங்குகள் வைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு அரங்கிலும் கிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சிறையில் கிருஷ்ணர் பிறந்தது,கிருஷ்ணரைக் கொல்ல அரக்கர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து தோற்றது,அவர் பிருந்தாவனத்தில் நடனமாடியது உள்ளீட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிலும் கிருஷ்ணர் கோவர்த்தன மழையை ஒரு குடையாக பிடித்து மக்களையும் கால்நடைகளையும் காப்பாற்றிய காட்சி நிஜமாக இடி மழையோடு அமைத்துள்ளனர்.மேலும் ஹோலி பண்டிகை கொண்டாட காரணமான கதை,கிருஷ்ணரின் மற்றொரு அவதாரமான ராமரின் கதைகளும் வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரங்கிற்கு கிழேயும் அதன் கதை இந்தி மற்றும் தமிழில் எழுதிவைக்கப்பட்டுள்ளது,தொட்டிலில் உள்ள குழந்தை கிருஷ்ணரை பார்வையாளர்களே தொட்டு ஆட்டிவிட்டு மகிழ்கின்றனர்.
கண்காட்சியுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது, லட்டு,பூந்தி உள்ளீட்டவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.கண்காட்சி நாளையுடன் (29/08/2024)நிறைவு பெறுகிறது.