உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / லோக்ரங் விழாவில் நம்மூர் தப்பாட்டம்

லோக்ரங் விழாவில் நம்மூர் தப்பாட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தின் கலாசார நகரமான ஜெய்ப்பூரில், நாட்டின் பல மாநிலங்களின் கலை, இசை, நடனம், பாரம்பரியங்கள் அனைத்தையும் ஒரே மேடையில் கொண்டுவரும் “லோக்ரங் விழா 2025” மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் மேடையேறிய தமிழக கலைஞர்களின் 'தப்பாட்டம்' மிகுந்த வரவேற்பை பெற்றது.தப்பட்ட கலை தமிழ்நாட்டின் உயிரோட்டமான மக்கள் நடனக் கலையின் அழகையும், பண்டைய பாரம்பரியத்தின் உயிரையும் வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான நடனமாகும்,நடனத்தின் நடுவே தீயை உமிழும் சாகசம் நிகழ்த்தி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தனர்.ஜவஹர் கலை கேந்திராவின் திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கலைஞர்கள் தங்கள் சுறுசுறுப்பான அசைவுகளாலும், இசையின் அதிர்வூட்டும் தாளங்களாலும் பார்வையாளர்களை மயக்கமடையச் செய்தனர்.நிகழ்ச்சி முழுவதும் பாரம்பரிய கலைக்கான மரியாதை, இந்திய கலாச்சாரத்தின் செழுமை, மற்றும் ஜார்கண்ட் மக்களின் உயிரோட்டமிக்க ஆவலை வெளிப்படுத்தியது.இங்கு நடைபெற்ற பல்வேறு மாநில நடனங்கள் நடைபெற்றது.அதில் ஒன்று 'சௌ' நடனம் என்பது போர் கலை கலந்த நாட்டிய வடிவம் ஆகும் ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் பிரபலமானது, இதில் பங்கேற்ற கலைஞர்கள் முகமூடிகள், வண்ணமயமான ஆடை அலங்காரம், உற்சாகமான அசைவுகள், பாரம்பரிய இசைத் தாளங்கள் ஆகியவற்றைக் கொண்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.லோக்ரங் விழாவின் வண்ணமயமான சூழலில், இந்த சௌ நடனம் பாரம்பரிய இந்தியக் கலையின் உயிரோட்டத்தையும், ஜார்கண்ட் மாநிலத்தின் பண்பாட்டு அடையாளத்தையும் வெளிப்படுத்தியது.மற்றெரு நடனமான தெய்யம் கேரளாவின் வடக்கு பகுதிகளில் குறிப்பாக கண்ணூர், காசரகோடு, வயநாடு ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு பண்டைய பாரம்பரிய வழிபாட்டு நடனக் கலை வடிவம் ஆகும். இது கேரளாவின் மிகச் சிறந்த மற்றும் ஆன்மீக ஆழமிக்க மக்கள் கலைகளில் ஒன்றாகும்.இது வெறும் நடனமாக இல்லாமல், தெய்வத்தை நேரடியாக உடலில் தாங்கும் வழிபாட்டு அனுபவமாக கருதப்படுகிறது. 'தெய்யம்' என்ற சொல் “தெய்வம்” என்ற வார்த்தையிலிருந்து உருவானது.இது போக ராஜஸ்தான் மாநிலத்தின் மிகவும் பிரபலமான மற்றும் அழகிய பாரம்பரிய மகளிர் நடன வடிவம் ஆகும். இது ராஜ்புத் அரச குடும்பங்களின் மரபை பிரதிபலிக்கும் ஒரு அழகிய சுற்று நடனம் ஆகும்.இது போன்ற பல மாநில நடனங்கள் ஒரே இடத்தில் பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ந்தனர்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி