UPDATED : நவ 12, 2024 12:19 PM | ADDED : நவ 12, 2024 12:16 PM
ஒரு காலத்தில் கடுமையான உடல் உழைப்பு காரணமாக எல்லோருக்குமே கட்டுக்கோப்பான உடலமைப்பு இருந்ததுஆனால் இன்று நேர்மாறாகிவிட்டது,கட்டுக்கோப்பான உடல் அமைப்பு கொண்டவர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.ஆனாலும் தங்களது உடலை தங்கம் போல நேசிக்கும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.தங்களது நேரத்தையும் வருமானத்தையும் ' ஜிம்மில்' செலவிட்டு ஒவ்வொரு அங்கத்தையும் செதுக்கிக் கொள்கின்றனர்,செம்மையாக்கிக் கொள்கின்றனர்.
இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு பிட்னெஸ் பாடி பில்டிங் பெடரேஷன் அமைப்பின் சார்பில் மிஸ்டர் அண்ட் மிஸ் ஹிந்துஸ்தான் போட்டிகள் கடந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் அமைப்பாளர்களில் ஒருவரும் முன்னாள் உலக பாடிபில்டிங் சாம்பியனுமான ரமேஷ் என்பவர் நமக்கு வேண்டிய தகவல்களை கொடுத்து உதவினார்.
வயது வாரியாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் வந்து கலந்துகொண்டனர்.,போட்டி கடுமையாக இருந்தது.அவர்களின் தலைப்பகுதி முதல் பாதம் வரை பத்துக்கும் மேற்பட்ட நடுவர்கள் பார்த்து மதிப்பெண் போட்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு,சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
இதுவும் ஒரு தரமான விளயைாட்டேயாகும் இந்த விளயைாட்டை ஊக்கப்படுத்தினால் இளைஞர்கள் கெட்ட பழக்க வழக்கங்களின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டார்கள் என்பதை பெற்றோர்கள் கவனம் கொள்ளவும்.
-எல்.முருகராஜ்.