உள்ளூர் செய்திகள்

யக்சகானம்

யக்சகானம் என்பது ஒரு பாரம்பரிய இந்திய நாடக நடனமாகும்.தமிழகத்தில் பரதமும்,கேரளாவில் கதகளியும் போல கர்நாடக மாநிலத்தின் பிரபலமான நாட்டிய நாடகமாகும்.பெரும்பாலும் ராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்தே இந்த நாட்டிய நாடகம் உருவாக்கப்படுகிறது.உரையாடல்,பாட்டு,இசை,நடனம் என்ற கலவை கொண்டதாகும்.நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களின் ஆடை, அலங்காரத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது.புராண காலத்து கதை என்றாலும் ஆங்காங்கே நகைச்சுவை கலந்து பேசி விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்கின்றனர்.சென்னையில் இந்த நாட்டிய நாடகம் கன்னடத்தில் நடந்தது என்றாலும் மொழிப்பிரச்னை இல்லாமல் ரசிக்க முடிந்தது.ராமாயணத்தில் மாயமானுக்கு சீதை ஆசைப்பட்டு ராவணனால் கடத்தப்படும் அந்த ஒரு பகுதியை மட்டும் ஒரு மணி நேர நாட்டிய நாடகமாக ரசிக்கும்படி வழங்கினர்.அதிலும் மாயமானாக வந்தவரின் துள்ளலான நாட்டிய நடிப்பும், ராவணன் ராட்சஷனாக மின்னல் வேகத்தில் மாறும் காட்சியும் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அவர்களது கைதட்டலே உணர்த்தியது.யகசகானம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நாட்டிய நாடகக் கலை.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GUNA SEKARAN
ஜன 01, 2025 20:42

தமிழகத்தில் இதன் பெயர் தெருக்கூத்து, பரதம் அல்ல. கதகளியிலும் யக்ஷகானத்திலும் ஆடைஅலங்காரம் மிகுதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை