உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / பாகிஸ்தானின் அழுகுணி ஆட்டம்; இந்தியாவுக்கு அலாரம்!

பாகிஸ்தானின் அழுகுணி ஆட்டம்; இந்தியாவுக்கு அலாரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா கிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர், அமெரிக்காவில் வைத்து, இந்தியாவை மீண்டும் தாக்கி பேசி உள்ளார். குறிப்பாக, சிந்து நதியின் மீது இந்தியா புதிதாக கட்டவிருக்கும் அணையின் வேலை முடிந்த கையோடு அதனை ஏவுகணைகள் வைத்து தகர்க்க இருப்பதாக கொக்கரித்துள்ளார். அதற்கு தேவையான எண்ணிக்கையில் ஏவுகணைகள் தங்கள் கைவசம் இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு நமது நாட்டிற்கான எச்சரிக்கை மட்டுமல்ல. அது, அந்த ஏவுகணைகளை சப்ளை செய்த சீனாவிற்கான நன்றி கூறும் ' மெசேஜ்'. அதை விட முக்கியமாக, அது அமெரிக்காவிற்கான செய்தி. தங்களுக்கு அமெரிக்கா, ஏவுகணைகள், போர் விமானங்கள் போன்றவற்றை வழங்கி உதவாவிட்டால், தொடர்ந்து சீனாவின் பக்கமே பாகிஸ்தான் சாய்ந்து இருக்கும் என்பதே அதன் சாராம்சம். அ சிம் முனீரை பொறுத்தவரை அது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. ---சவால் ஆனால், அசிம் முனீர் அதோடு நிற்கவில்லை. நமது நாட்டுடன் அணு ஆயுத போர் நடைபெறுமேயானால், பாகிஸ்தான் உலகில் பாதியை தன்னோடு அழிவு பாதைக்கு எடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறி உள்ளார். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல. ஒரு விதத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு விடப்பட்ட சவால். அசி ம் முனீரின் கணக்கு இது தான். ஒன்று, இந்தியாவுடன் காஷ்மீர் மற்றும் தற்போதைய சிந்து நதி நீர் பிரச்னை ஆகியவற்றிற்கு பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், அவை தான் இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு வழி வகுக்கும். அவ்வாறு போர் நடைபெற்றால், அதுவே அணு ஆயுத தாக்குதலுக்கு காரணமாகும். ஆனால், இங்கும் அசிம் முனீர் சொல்லாமல் சொன்ன ஒரு செய்தி உள்ளது. நமது நாட்டுடன் அணு ஆயுத போர் வெடித்தால், உலகில் பாதியை தாக்கி அழிக்கும் திறனுக்கு பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன, என்பதே அந்த மெசெஜ். இது நமது நாட்டிற்குமான மெசேஜ். காரணம், உலகில் பாதியையே அழிக்கும் அளவிற்கு அணு ஆயுதம் தங்களி டம் இருக்கும் போது, பாகிஸ்தான் இந்தியாவை முற்றும் முழுதுமாக அழிக்கும் என்பதே அந்த செய்தி. அதில் 150 கோடி இந்தியர்கள் மட்டுமல்ல, அண்டை அயல் நாடுகளின் மக்களும் சேர்ந்து மடிந்து போவர். அத்தகைய தாக்குதலில் அனைத்து பாகிஸ்தானியர்களும் அடங்குவார்கள். இதுவும் அசிம் முனீர் சொல்லாமல் விட்ட செய்தி. அதாவது, நமது ஊரில் சொல்வார்களே, மகன் இறந்தாலும்... என்ற அந்த பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. நம்பகத்தன்மை அசிம் முனீரின் இந்த அறிவிப்பை நமது நாடு விளையாட்டாக கருதி விட்டுவிட கூடாது. அவரது கொக்கரிப்புகளுக்கான பதிலை நமது அரசு அடக்கியே வாசித்துள்ளது. இது பாகிஸ்தானின் வழக்கமான புரூடா, அழுகுணி ஆட்டம் என்பது போன்று நம் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், விஷயம் இதோடு முடிந்து விடக்கூடாது. காரணம், பாகிஸ்தான் ராணு வ தளபதியின் கருத்துக்கு பின்னால் ஒரு உண்மை புதைந்துள்ளது. கடந்த 1998ம் ஆண்டு, இரண்டாவது பொக்ரான் அணு- ஆயுத சோதனைக்கு பின்னர், நமது நாடு எந்தவொரு நாட்டுடனும் அணு- ஆயுதப் போரை துவங்க மாட்டோம் என்று தன்னிச்சையாகவே பிரகடனப்படுத்தியது. அதே சமயம் நமது நாட்டின் மீது அணு ஆயுதம் ஏவி விடப்பட்டால், நாம் சரியான பதிலடி கொடுப்போம் என்பதே நமது கொள்கை. இதனை 'நோ- பர்ஸ்ட் -யூஸ்' கொள்கை என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதுவே தற்போ தைய பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கையும் கூட. ஆனால், பாகிஸ்தான் இது போன்ற தார்மீக பிரச்னைகளில் எல்லாம் தலை கொடுக்கவில்லை. இதன் காரணமாக, பாகிஸ்தானிற்கு அவசியம் என்று தோன்றினால், ஒருதலைப்பட்சமாக இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவதற்கு தயங்காது என்பதே அதன் கொள்கை. சு தந்திரம் கிடைத்த நாள் முதல், நமது நாட்டின் நம்பகத்தன்மை காரணமாக, உலக நாடுகள் நமது கொள்கையின் பின் புதைந்துள்ள உண்மை தன்மையை எந்தவித சந்தேகங்களும் சர்ச்சைகளும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ள ன. இந்த பின்னணியில், அசிம் முனீரின் கொக்கரிப்பை தொடர்ந்து, அவருக்கு அமெரிக்காவில் கிடைக்கும் வரவேற்பையும் தொடர்ந்து, நமது கொள்கையை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்தை பாகிஸ்தான் ராணுவ தலைமை தோற்றுவித்துள்ளது. இரண்டு தோள்கள் இது குறித்த நமது அரசின் முடிவு எதுவாக இருந்தாலும், அது பத்திரிகை செய்தியாகாமல் இருந்தாலும், பாகிஸ்தான் அதனை காரணம் காட்டி சர்வதேச சமூகத்தின் முன் மீண்டும் அழிச்சாட்டியம் பண்ணும். அவ்வாறு ஒரு சூழ்நிலை உருவாகுமேயானால், பாகிஸ்தானை தாங்கி பிடித்துக்கொள்ள, ஒன்றல்ல, சீனா, அமெரிக்கா என்ற இரண்டு தோள்கள் அந்த நாட்டிற்கு தற்போது கிடைத்துள்ளன. இது தான், இரண்டு மாதங்களில் இரண்டு முறை அமெரிக்கா விஜ யம் செய்த அசிம் முனீரின் சாதனை! இதை புரிந்து மத்திய அரசு நாசூக்காக தன் செயல்பாடுகளை வகுத்து கொள்ள வேண்டும். --என். சத்தியமூர்த்தி - சர்வதேச அரசியல் ஆய்வாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2025 07:51

உலகின் ஏழ்மையான நாடு கூட பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் தங்களுக்கு இடையூறாக உள்ளதாக வெளியேற்றினர் . அந்த ஒரு நிகழ்வை தமிழ்நாட்டு பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மறக்கக்கூடாது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 13, 2025 10:50

முதலில் அணுவாயுதங்களை ஏவமாட்டோம் என்கிற முடிவை நாம் மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை.. காரணம் பாகிஸ்தான் தொடர்ந்து தனது அணுவாயுத பலத்தை மட்டுமே மையப்படுத்தி பேசி வருகிறது .... குரல் யாருடையது, அங்கேயுள்ள பிரதமரின் குரல் இல்லையே என்று இனியும் பார்ப்பது அறிவுடைமை ஆகாது .....


அப்பாவி
ஆக 13, 2025 09:05

இந்தியாவுடன் டாரிஃப் பேச்சு வார்த்தை நடக்கும்.போதே பாகிஸ்தானுக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கபடும். பாகிஸ்தான் மக்கள் கெஞ்சியதால் மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் குடுத்தோம்னு சொல்லிடலாம். பாகிஸ்தானும் உதார் விட்டு காலரை தூக்கி விட்டுக்கொள்ளும். தனது ராஜதந்திர வெற்றின்னு ட்ரம்ப் சொல்லிக்குவார்.


vivek
ஆக 13, 2025 09:11

ஊரு ரெண்டுபட்டா அப்பாவிக்கு கொண்டாட்டம்


Mohan
ஆக 13, 2025 10:25

நீ எல்லாம் என்னைக்கு தாய் நாட்டுக்கு விஸ்வாசமா இருந்திருக்க சொல்லு ... உன்னோட எண்ணமெல்லாம் பாக்கிஸ்தான் கிட்ட இந்தியா தோற்கணும் அதை வைத்து ராகுல் பப்புவை பிரதமர் ஆக்கணும் அதுதானே ராசா உன் எண்ணம் ... விளங்குவிய நீ ..ஒருவேளை மூர்க்கன் இருப்பே அதான் இந்த புலம்பல் இந்த 11 வருசமா


naranam
ஆக 13, 2025 07:31

பாகிஸ்தானுக்கு நம் வெளியுறவுத் துறையின் பதில் மிகவும் மிதமானதாக உள்ளது..கடுமையான அதே சமயம் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கும் எச்சரிக்கை அளிக்கும் விதமான பதிலை இந்தியா அறிவிக்க வேண்டும். நம் நாட்டின் அணு ஆயுத ஏவுகணைகள் அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாக அவற்றைத் தயாரிக்க வேண்டும்.. பிறகு தான் அமெரிக்காவும் பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவைத் தாக்கும் எண்ணத்தைக் கைவிடும். எடுத்த எடுப்பிலேயே முதலில் அணு ஆயுதப் பிரயோகம் செய்வோம் என்றும் அறிவிக்க வேண்டும். பயன் படுத்தி நம் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவே அணு ஆயுதங்கள் உற்பது செய்யப் பட்டுள்ளன..பின் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன் படுத்துவோம் என்றும் அறிவிக்க வேண்டும். அப்போது தான் மேற்கூறிய மூன்று நாடுகளும் நம் இந்தியா மீது பயம் மற்றும் மரியாதை கொள்ளும். அணு ஆயுதப் பிரயோகத்தில் எந்த விதக் குழப்பமும் இல்லை என்பது நாம் இந்திய ராணுவத்திற்குப் புரியும்படி செய்ய வேண்டும். பிறகு சிந்து நதியின் மீது கட்டப்படும் ஆணை மீது கைவைக்க எந்தக் கொம்பனும் யோசிப்பான்.


kamal 00
ஆக 13, 2025 05:22

சோத்து க்கே வழி இல்லை... இவன் பேச்சை பாக்கிஸ்தான் மக்கள் முதலில் ஏற்று கொள்ளட்டும்.... அப்புறம் மத்தவங்க


SANKAR
ஆக 13, 2025 07:26

Pak army does not care about people s opinion and consent .They do not even care about Government s opinion and consent.


சமீபத்திய செய்தி