மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம்: டிரைவர் கைது
08-Aug-2025
ஈரோடு, ஈரோட்டில், சிறுமியை பலாத்காரம் செய்த எலக்ட்ரீஷியன், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.ஈரோடு, மூலப்பாளையம் நேரு வீதியை சேர்ந்த ஏழுமலை மகன் அஜித், 27, எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தபடி, கேட்டரிங் பணியிலும் ஈடுபட்டு வந்தார். கேட்டரிங் வேலைக்கு செல்லும்போது, ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை தனிமையில் சந்தித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரணை நடத்தி, அஜித் மீது போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அஜித்தை அடைத்தனர்.
08-Aug-2025