உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / திருக்கோவிலுாரில் கண் சிகிச்சை முகாம் துவக்கம்

திருக்கோவிலுாரில் கண் சிகிச்சை முகாம் துவக்கம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார், சாரதா வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் நினைவாக, இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று துவங்கியது. இந்த முகாம் வரும், 19ம் தேதி வரை மொத்தம் ஏழு நாட்கள் நடக்கிறது. இதை பள்ளி நிர்வாக தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார்.அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் கஜேந்திரகுமார் வர்மா தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். மேலாளர் ரஞ்சித் முகாமை ஒருங்கிணைத்தார். முதல் நாளான நேற்று, 150 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே அமைக்கப்பட்ட நடமாடும் அரங்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கண் கண்ணாடி, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.நாள்தோறும் முதலில் வரும், 200 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சியில் வீரட்டகரம் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், பாபு, காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை