உணவு டெலிவரி ஊழியரிடம் போன் பறிப்பு
கீழ்ப்பாக்கம்,புரசைவாக்கம், சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 35. தனியார் உணவு 'டெலிவரி' நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், உணவு டெலிவரி செய்ய, கீழ்ப்பாக்கம் முனியப்பா தெரு வழியாக சைக்கிளில் சென்றார்.அப்போது, அங்கு ஒரே 'பைக்'கில் வந்த மூவர், சுரேஷ் கையில் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு, அவரை தாக்கிவிட்டு தப்பினர். புகாரின்படி, கீழ்ப்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.