உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / தெரு நாய்கள் தொல்லை தீர பல நடவடிக்கைகள் அவசியம்!

தெரு நாய்கள் தொல்லை தீர பல நடவடிக்கைகள் அவசியம்!

நம் நாட்டில் தெரு நாய்கள் தொல்லை அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. அதுவும், தலைநகர் டில்லியில் இந்தப் பிரச்னை தீவிரமானதால், சமீபத்தில் இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, 'டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை எட்டு வாரங்களில் அப்புறப் படுத்தி, காப்பகங்களில் அடைக்க வேண்டும். 5,000 தெரு நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க வேண்டும். 'இனிமேல், 'ரேபிஸ்' பாதிப்பால் யாரும் உயிரிழக்கக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்தது. டில்லி மாநில அரசுக்காக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை, மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டிய அவசியம் உருவாகும் என்றும் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு, விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டில்லி உட்பட பல நகரங்களில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தெரு நாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமைத்தார். வழக்கை விசாரித்த அந்த அமர்வு, 'அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, அரசு தரப்பிலோ, டில்லி மாநகராட்சி தரப்பிலோ, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 'தெரு நாய்கள் பிரச்னைக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்' என, தெரிவித்தது. ஆனாலும், இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்காமல், தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2024ம் ஆண்டில், நாடு முழுதும், 37 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நாள் தோறும், 10,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு மட்டுமின்றி, குழந்தைகள், முதியவர்கள், வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் வீடு திரும்புவோர் போன்றவர்களுக்கு, தெரு நாய்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. டில்லியில் மட்டும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றுக்கு எல்லாம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடுவுக்குள், காப்பகங்கள் அமைப்பது எளிதான காரியம் அல்ல. இடப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பயிற்சி பெற்ற ஆட்கள் பற்றாக்குறை என, பல பிரச்னைகளை மாநில அரசு சந்திக்க நேரிடும். அதனால், உத்தரவை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் தேவைப்படலாம். எனவே, அதற்கு முன்னதாக, நாய்களின் உணவுக்கு மூல ஆதாரமாக உள்ள குப்பை தொட்டி களை சீரான இடைவெளியில் காலி செய்து சுத்தமாக வைத்திருப்பது, நாய்களுக்கு உணவு அளிப்போரை கட்டுப்படுத்துவது, இறைச்சி கடைகள், உணவகங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவு மற்றும் இறைச்சியை கொட்டுவதை முறைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி போடுவது போன்றவற்றை யும், குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, நாய்களை துன்புறுத்தாமல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரி கள் சரியாக செய்யத் தவறுவதால் தான், தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன், பொதுமக்களும் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரிக்கும் வகையில், அவற்றுக்கு உணவு அளித்து ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவால் மட்டும் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்பதே நிதர்சனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சண்முகம்
ஆக 18, 2025 22:18

Blue color would calm a dog. Dog trainers use blue color to help dogs in distress. It will not repel dogs. On the contrary, smells like ammonia or garlic would repel because dogs have a keen sense of smell.


Vasan
ஆக 18, 2025 20:37

It is believed that Dogs are afraid of Blue colour. So, every house can keep a transparent water bottle containing Blue colored water in front of their house, which will drive away the stray dogs. Let us try.


shakti
ஆக 18, 2025 16:00

ரேபிஸ் வாக்சின் தயாரிக்கும் கம்பெனிகளிடம் காசு வாங்கிக்கொண்டு இந்த போலி போராளிகள் கூவுகிறார்கள்


Ramalingam Shanmugam
ஆக 18, 2025 15:46

நாய்களை பிடித்து காடுகளில் விட்டுவிடுங்கள்


தமிழன்
ஆக 18, 2025 14:43

புறாக்கள் சென்னை மாநகரில் வருகிறதே.. பறவை காய்ச்சல் என அதை தடுக்க புறா பிடிப்பார்களா ? லஞ்சம் என அரசு வட்டாரத்தில் பரவலாக நோய் பரவுகிறதே.. அதை தடுக்க என்ன செய்ய போறாங்க.. சும்மா இருக்கிற நாயாய் இப்படி படுத்தலாமா என்று யாராவது கேட்டுகிட்டு வர போறாங்க.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 18, 2025 14:37

ராகுல் பீகாரில் பாத யாத்திரை போகிறாராம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 18, 2025 14:33

புடிச்சு நாகாலாந்து, மிசோரம் பக்கம் அனுப்புங்க. சீனா, கொரியா, வியட்நாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுங்க.


P.PUGALESWARAN
ஆக 18, 2025 13:50

மனிதரில் சில நல்லவர்களும் சில கெட்டவர்கள் இருப்பது போல நாய்களிலும் ஒன்று இரண்டு கடிக்கிற நாய் இருக்கலாம் தெரு நாய்கள் என்ற ஒன்றே இருக்கக்கூடாது என்பது ஒரு அஜெண்டா அதற்காக பல வருடங்களாக அவர்கள் செய்த பிரச்சாரத்தின் விளைவாகஇன்று நாய்கள் மேல் அனைத்து மக்களுக்கும் ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.. ஒரு விஷயத்தை நமது மறந்துவிடக்கூடாது நமது பாரத தேசம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தெரு நாய்களோடு இணைந்து வாழும்பண்பாட்டு முறையை கொண்டது இன்னும் பெரும்பாலான மக்கள் நாய் என்று சொல்வதை விட காலபைரவர் என்றுதான் அழைத்து வருகிறார்கள். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் சிறிது பார்க்க வேண்டும்.. கடந்த வியாழன் அன்று மோகன் பகவத் ஜிஅவர்கள் பேச்சையும்அனைவரும் கண்டிப்பாகபார்க்க வேண்டும்.


Anantharaman Srinivasan
ஆக 18, 2025 13:37

நாய்கடியை சாதாரணமாக எடுத்துக்கொண்டு நாய்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பாம்பு கடியையும் அதுபோல் எடுத்துக்கொள்வார்களா..?


Natchimuthu Chithiraisamy
ஆக 18, 2025 10:40

சட்டமே அப்புறப்படுத்தி என்கிற வார்த்தைகளை தயவு செய்து உபயோகிக்காதீர்கள். அதன் முழு அர்த்தம் அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. செய்தி வந்தவுடன் நகர நாய்களை அதிகாரிகள் கிராமப்புறங்களில் ஆல் இல்லாத இடத்தில் இரவு நேரத்தில் விட்டுவிடுகிறார்கள் அப்புறப்படுத்தியாச்சு அந்த நாய்கள் ஒரு சில நாள் பசியோடு இருந்து விட்டு பிறகு ஆடுகளை பட்டியில் பிடித்து தின்கிறது காங்கேயத்தில் பல போராட்டம் நடத்தியாச்சு மந்திரி முத்துசாமி அவர்களுக்கும் தெரியும். மீண்டும் சட்டம் அப்புறப்படுத்தும் வார்த்தையை பயன்படுத்துகிறது. நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று சொல்லட்டும். சோறு போடா முடியாமல் காடுகளில் நாய்களை அதிகாரிகள் விட்டு விடுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை