உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / துணை ஜனாதிபதி வேட்பாளர் தமிழகத்திற்கு பெருமையே!

துணை ஜனாதிபதி வேட்பாளர் தமிழகத்திற்கு பெருமையே!

துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக்தீப் தன்கர், மருத்துவ காரணங்களைக் கூறி, திடீரென ராஜினாமா செய்தார். அதனால், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் சட்ட பதவியான இதற்கு, புதிதாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. லோக்சபா துணை சபாநாயகர் பதவி போல, துணை ஜனாதிபதி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்பதால், விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், இரண்டு முறை எம்.பி.,யாக பதவி வகித்தவரும், தற்போது மஹாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகிப்பவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டு போட்டு தான், துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். அதன்படி பார்த்தால், இரு சபைகளிலும் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு போதிய பலம் உள்ளது. எனவே, அந்தக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. இருப்பினும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற, 'இண்டி' கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு நீதிபதியாக எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்; சட்டத் துறையை சேர்ந்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் நபர். நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மதசார்பற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர். உச்ச நீதிமன்ற பதவியில் இருந்து, 14 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றது முதல் இதுவரை, எந்த அதிகார பதவிகளையும் வகிக்காத நபர். அதனால் தான், அவரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துள்ளன. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கனவு கண்டு வரும் பா.ஜ., மேலிட தலைவர்கள், சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்ததன் வாயிலாக, வரும் சட்டசபை தேர்தலில், தங்களுக்கு தமிழக மக்களின் அமோக ஆதரவு கிடைக்கும். அதுமட்டுமின்றி, தமிழகத்தை ஆளும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படும் என்றும் நம்பினர். ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் முடிவை தெளிவாக தெரிவித்து விட்டார். இண்டி கூட்டணி அறிவித்துள்ள வேட்பாளருக்கே தன் ஆதரவு என்று உறுதியாக கூறியுள்ளார். தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் ராதாகிருஷ்னனை ஆதரிக்க வேண்டும் என்ற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார். மேலும், தே.ஜ., கூட்டணி சார்பில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தை சேர்ந்த ஒருவரே இண்டி கூட்டணி சார்பிலும் வேட்பாளராகவும் அறிவிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்தன. ஆனால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதர்ஷன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது, தென்மாநிலங்களை சேர்ந்த இருவரே களம் காணும் சூழல் உருவாகி உள்ளது. அத்துடன், சுதர்ஷன் ரெட்டியை ஆதரிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை போன்றே, தே.ஜ., கூட்டணி வேட்பாளரான ராதாகிருஷ்ணனை ஆதரிக்கப் போவதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், அம்மாநில எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியும், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்தவர் என்பதால், அவரை தேர்ந்தெடுத்ததன் வாயிலாக, அந்த இயக்கத்தையும் பிரதமர் மோடி திருப்திபடுத்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி; அதில், வியக்கத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படாது என நம்பலாம். ஆனாலும், ஜனநாயக ரீதியான போட்டி இருக்க வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளன. இருப்பினும், தே.ஜ., கூட்டணி வேட்பாளராக ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது தமிழகத்திற்கு பெருமையே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

பேசும் தமிழன்
ஆக 25, 2025 19:41

என்னாது ஜனநாயக ரீதியில் போட்டியா.... யாரை பலிக்கடாவாக தேர்ந்தெடுக்கலாம் என்ற கூட்டத்தில்... அத்தனை பேரும் எஸ்கேபாகி விட.... ஆந்திராவில் இருந்து ஒருவரை கொண்டு வந்து பலிக்கடாவாக்கி இருக்கிறார்கள்.... அவ்வளவு தான் !!!


venugopal s
ஆக 25, 2025 17:32

காலையில் மனைவியுடன் பயங்கரமாக சண்டை போட்டு விட்டு வேலைக்கு செல்லும் கணவன் இரவு வீடு திரும்பும் போது மனைவியிடம் பல்லைக் காண்பித்து சமாதானம் ஆவது போல் தான் இதுவும்!


என்னத்த சொல்ல
ஆக 25, 2025 17:31

திரு ஸ்டாலின் தமிழர் என்பதால், 2026 தேர்தலில், அணைத்து கட்சிகளும் அவர் முதலீவர் ஆக, ஆதரிக்க வேண்டும்.


பேசும் தமிழன்
ஆக 25, 2025 19:43

தமிழருக்கு திராவிடர் ஓட்டு இல்லை என்றால்..... திராவிடருக்கு தமிழர்கள் ஓட்டு இல்லை... இதை தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.


Narayanan
ஆக 25, 2025 16:52

திமுக தனது வசதிக்கு சித்தாந்தங்களை மாற்றிக்கொள்ளும் அமைப்பு . அவர்களுக்கு ஆர் எஸ் எஸ் போன்ற கட்டுக்கோப்பான அமைப்பை பிடிக்காது . அவர்களின் ராமசாமியிசம் அப்படித்தான் . அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக அறிவித்து ஆதரவு கேட்டார்கள் கருணாநிதியிடம் . மறுத்துவிட்டார் .தமிழுக்கு ,தமிழருக்கு துரோகம் செய்வது அவர்களுக்கு கைவந்த கலை . இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க நக்கீரன் கோபால் கொடுத்த துப்பை அப்படியே காங்கிரஸ் அரசிடம் வழங்கி, இவர் இரண்டுமணிநேரம் உண்ணாவிரத நாடகம் நடத்திய அன்பர்கள் . என்றாலும் எல்லாம் தெரிந்தும் தமிழக மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்று சொன்னால் தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் ? கருணாநிதி சொன்னதுபோல்" தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்தான்" .


sathish
ஆக 25, 2025 15:45

அவர் அப்பதவியில் தமிழ்நாடு தேர்தல் முடியும்வரை மட்டுமே இருப்பார்.


mukesh
ஆக 25, 2025 13:43

தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை


xyzabc
ஆக 25, 2025 12:17

ஆனால் எங்கள் திராவிட மாடலின் பெருமைகள் வேற லெவல். டாஸ்மாக்கில் எவ்வளோ நிதி வந்தது ? எத்தனை கொலை கொள்ளை பாலியல் சம்பவங்கள் ..?


Venkataraman
ஆக 25, 2025 10:04

தமிழர்களுக்கு பெருமை, ஆனால் திராவிடர்களுக்கு ? தமிழர் அல்லாதார் திராவிடர்கள்தானே. பெரிய பதவிகளுக்கு கருணாநிதி குடும்பத்தினர்தான் வர முடியும். மற்றவர்களுக்கு அனுமதியில்லை. அதனால்தான், அப்துல்கலாம், மூப்பனார் போன்றவர்களை பெரிய பதவிகளுக்கு வர கருணாநிதி குடும்பம் அனுமதிக்க வில்லை.


veeramani
ஆக 25, 2025 09:29

இந்திய தேசத்தின் பெருமைமிகு பதவி ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி... இந்திய நடையூரை சட்டம் சொல்வது சரி. ஆயினும் முன்னாள் ஜனாதிபதி வெங்கடராமன் பின்பு தமிழர் எவரும் டெல்லியில் மிக பெரிய பதவியை வகிக்கவில்லை வணக்கத்திற்குரிய கோவையை சார்ந்த திரு ராதாகிருஷ்ணன் அவர்களை முன் நிறுத்தியதால் தமிழர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு பெருமிதம் கொள்ளவேண்டும். என்னயெனில் இந்திய ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு நமது தமிழருக்கு உண்டு . தமிழக பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஒரு தமிழருக்கு வாக்குகளை செலுத்தி தமிழனின் பெருமையை நிலைநிறுத்தவேண்டும்


Mario
ஆக 25, 2025 09:16

10 பைசாக்கு பிரியோஜனமில்லாத பதவி இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது...


vivek
ஆக 25, 2025 10:26

தரை லோக்கல இல்லை லண்டனா


vijai hindu
ஆக 25, 2025 11:31

இப்ப பத்து பைசா இருக்கா ஏன் இந்த பழைய பல்லவியை பாடிட்டு இருக்கீங்க ஒரு தமிழன் துணை ஜனாதிபதி ஆவது உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல்


பேசும் தமிழன்
ஆக 25, 2025 19:46

அப்போ எதுக்கு உங்கள் இண்டி கூட்டணி சார்பில்.... ஒரு ஆளை பிடித்து வந்து பலிக்கடாவாக ஆக்கி இருக்கிறீர்கள் ???


சமீபத்திய செய்தி