உடலுக்கு வயதானாலும் மனதுக்கு வயதில்லை! யோகாவில் வியக்க வைத்த பெண்கள்
‘வயது என்பது வெறும் எண் மட்டுமே; மனமும் உடலும் ஒத்துழைத்தால் எதையும் சாதிக்கலாம்’ என்பதை நிரூபிக்கும் விதமாக, திருப்பூர,் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது. துள்ளலோடு ஓடியாடும் அரசுப் பள்ளி மாணவியர் துவங்கி, 60 வயதை கடந்த மூத்த பெண்மணிகள் வரை அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் அமர்ந்து, கடினமான ‘அட்வான்ஸ்’ யோகாசனங்களைக் கூட அனாயாசமாக செய்து, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். யோகாசன பயிற்சி வழங்கிய மாலதி கூறியதாவது: நானும் என் கணவரும் கடந்த, 15 ஆண்டுகளாக யோகா பயிற்சி வழங்கி வருகிறோம். இந்த யோகா சிறப்பு நிகழ்ச்சியில், 10 ஆண்டுகளாகப் பயிற்சி பெறுபவர்கள் முதல், இரண்டு மாதங்களுக்கு முன்பு யோகாவில் அடியெடுத்து வைத்த புதியவர்கள் வரை, விழிப்புணர்வோடும் உற்சாகத்தோடும் பங்கேற்றனர்.மூட்டு வலி, முதுகு வலி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு எனப் பல்வேறு உடல் உபாதைகளுடன் வருபவர்களுக்கு, அவர்களின் உடல்நிலைக்கு ஏற்பப் பயிற்சிகள் அளிக்கிறோம். குறிப்பாக, 90 கிலோ எடை கொண்ட ஒரு பெண்மணி கூட இங்கு வந்து பயிற்சி பெற்று, இன்று உடலை வளைத்து ஆசனங்களைச் செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.வீட்டிலிருந்து யோகா செய்வதற்கான சூழல் பல பெண்களுக்கு அமைவதில்லை. குடும்பத்திற்காகவே ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள், தினமும் தங்களின் ஆரோக்கியத்திற்காக ஒரே ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். ஓரிரு மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தாலே உடல் உபாதைகள் நீங்கிவிடும்; அதன்பின், யோகா அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிடும். இங்கு வந்து சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களே அதற்குச் சாட்சி.யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அதுவொரு வாழ்வியல் முறை; உணவு முறை, வாழ்வியல் ஒழுக்கம் மற்றும் யோகா ஆகிய மூன்றையும் இணைத்து, ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார். வீட்டிலிருந்து யோகா செய்வதற்கான சூழல் பல பெண்களுக்கு அமைவதில்லை. குடும்பத்திற்காகவே ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள், தினமும் தங்களின் ஆரோக்கியத்திற்காக ஒரே ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்டும