வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Madam where is your clinic
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சைக்காலஜிஸ்ட் ஸ்வர்ண கீர்த்திகா. இவர் கவுன்சிலிங் கிளினிக் நடத்தி வரும் நிலையில் மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்று இலவச கவுன்சிலிங் அளிக்கிறார். சிறு சிறு பயிற்சிகள் மூலம் நினைவாற்றலை அதிகரிப்பது, குழந்தை பருவ அதிர்ச்சியை சரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.இவர் கூறியதாவது: மக்களுடன் பேசுவது மிகவும் பிடிக்கும். அது தான் என்னை சைக்காலஜி படிப்பை எடுக்க வைத்தது. பின் பேசுவதை விட கவனிப்பது முக்கியமானது என தெரிந்தது. அவர்களுடைய இடத்தில் இருந்து பார்க்கும் எம்பதி வேண்டும். 'எம்பதி' என்றால் அவர்கள் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும். எல்லோ ருக்கும் சூழல் வரும். ஆனால் எந்த மன உந்துதல் அவர்களை அவ்வாறு செயல்பட வைக்கிறது என தெரிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழி மனித உளவியலுக்கு நன்கு பொருந்தும். இதனாலயே சிறுவர்கள், கர்ப்பிணிகள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்த ஆயத்தமானேன். நம் மாணவர்க ளுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு போதவில்லை. மாணவர்களுக்கு ஏன் இதெல்லாம் தேவை என பெற்றோரே கேட்கின்றனர். குழந்தைக்கு தேவை யானதை கொடுக்கவும் செய்கிறோம் என பெற்றோர் நினைக்கின்றனர்.ஒரு பெண் கர்ப்பமானதும் முதலில் தரும் மாத்திரைகள் மூளை தொடர் பானவை தான். மூளையை வளப் படுத்துவது தான் முக்கியம். அங்கி ருந்து சைக்காலஜி துவங்குகிறது. மன வளத்திற்கு மனிதனின் உடல் எவ் வளவு முக்கியம் என்பதை பயோ சைக் காலஜி எனும் பிரிவு உணர்த்துகிறது. மன அழுத்தமாக உள்ளதாக கூறு வோருக்கு மூளையில் சில இடங்கள் ஆக்டிவேட் ஆகாமல் இருக்கும். அங்கு வேறு கதை இருக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்வியல் மாற்றம் மிக முக்கியமான விஷயம். அதற்கு வழிகாட்டுவது தான் கவுன்சிலிங். வீடு, இடம் சுத்தமாக இல்லை என்றால் கூட குழந்தைகளின் மூளையை பாதிக்கும். உணர்ச்சிகளில் சமநிலை இன்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நார்சிஸ்டிக் பர்சானலிட்டி டிஸ்ஆர்டர் உள்ளோருக்கு எம்பதியே' இல்லாமல் இருக்கும். 'நார்சிஸ்டிக் ஆளுமைக் குறைபாடு உள்ளவர்கள் தங்களின் சுய உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவோராகவும், அதிகமாக பாராட்டுகளை விரும்புபவர்களாகவும், மற்றவர்களை செய்யாமலும் இருப்பர். அதிகாரத்தைக் கைப்பற்றுவது, வெற்றியை அடைவது. அவர்களின் தோற்றத்தைப் பற்றியே சிந்திப்பதில் நேரம் செலவிடுவர்.பல்வேறு உளவியல் பாதிப்புகளுக்கு நியூரோபிக்ஸ் பயிற்சிகள் உள்ளன. இது மூளையின் நியூரான்களை ஆக்டி வேட் செய்யும். பயிற்சிகள் மூலம் கற்றல் குறைபாடு, குழந்தை பருவ அதிர்ச்சியை சரி செய்யலாம்.விளையாட்டு பயிற்சிகள் மூலமும் மூளையை வளப்படுத்த முடியும். கிளினிக் தவிர பள்ளிகளுக்கு சென்று இலவசமாக மாணவர்களுக்கு பல் வேறு உளவியல் பரிந்துரைகளை வழங்கி கொண்டிருக்கிறேன். முக்கியமாக வாழ்வியல் மாற்றத்தை மாற்றுவதன் மூலமாக மாற்றம் ஏற்படுத்தலாம்' என்றார்.இவரை பாராட்ட 63690 69231
Madam where is your clinic