ஜோர்டானில் 10வது சர்வதேச யோகா தின விழா
அம்மான் : ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் 10வது சர்வதேச யோகா தின விழா மிகவும் உற்சாக அனுசரிக்கப்பட்டது. இந்த யோகா தினத்தையொட்டின் அம்மான நகரின் அல் ஹுசைன் விளையாட்டு நகரில் பொதுமக்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த யோகா நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் எளிய வகை ஆசனங்களை செய்ய அதனை பின்பற்றி பொதுமக்கள் யோகாவை மேற்கொண்டனர். யோகா உடல் நலன், மனநலனுக்கு சிறந்தது என்பதை பயிற்சியாளர்கள் விளக்கி கூறினர். - நமது செய்தியாளர் காஹிலா