உள்ளூர் செய்திகள்

துபாயில் ஸ்வராஞ்சலி நிகழ்ச்சி

துபாய் : துபாய் இந்தியா கிளப்பில் மியூசிக் இந்தியாவுடன் இணைந்து அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்தநாளையொட்டி நடந்த 'ஸ்வராஞ்சலி' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரஷாந்தி சோப்ரா, ராகேஷ், சீனிவாசன், ஜெயலட்சுமி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை பாடி நினைவு கூர்ந்தனர். அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், எஸ்.எஸ். மீரான், ஜி.பி. புரடக்ஷனின் பிரஷாத் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் இசை ஆர்வலர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !