உள்ளூர் செய்திகள்

அபுதாபி இந்து கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்

அபுதாபி : அபுதாபி நகருக்கு ஓய்வு எடுப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்த லூலூ குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. யூசுஃப் அலியை சந்தித்து பேசினார். அவரது ஆதரவுடன் அபுதாபி அரசின் பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவானது கலை சேவைக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோவிலை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். கோவிலுக்கு சென்ற அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார். மேலும் அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் பள்ளிவாசலையும் நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்