அல் அய்ன் இந்திய சமூக மைய புதிய நிர்வாகிகள் தேர்வு
அல் அய்ன்: அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் புதிய நிர்வாகக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். குழுவின் தலைவராக ரசல் முஹம்மது சாலியும், பொதுச் செயலாளராக சந்தோஷ் குமார் எடச்சேரியும், பொருளாளராக அஹமது முனவர் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த குழுவினர் அபுதாபியில் இந்திய தூதர் சஞ்சய் சுதிரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா