உள்ளூர் செய்திகள்

துபாயில் ரத்ததான முகாம்

துபாய்: துபாய் இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஈவெண்ட்ஸ் அமைப்பு அமீரகத்தின் 54வது தேசிய தினவிழாவையொட்டி சிறப்பு ரத்ததான முகாமை நடத்தியது. இந்த முகாமில் 250 க்கும் மேற்பட்டோர் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். இந்திய துணைத் தூதரக அதிகாரி பபித்ர குமார் மஜும்தார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். முகாமுக்கான ஏற்பாடுகளை பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஈவெண்ட்ஸ் அமைப்பு சிறப்பாக செய்திருந்தது. - துபாயிலிருந்து நமது வாசகர் வெங்கட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !