துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவையின் சார்பில் நடந்த ரத்ததான முகாம்
துபாயில் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை 78வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் 58 வது இரத்ததான முகாம் அல் பரஹா மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது.. இந்த இரத்த தான முகாம் துபாய் மண்டலத் தலைவர் முஹம்மது ஃபாருக் தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் முன்னாள் தலைவர் முபாரக் முஸ்தபா, பஹ்ரைன் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் அமைப்பின் நிறுவனர் செய்யது ஹனீஃப், ஊடகத்துறை பேராசிரியர் அப்துல் ஃபைஸ், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயதுல்லாஹ், சமூக சேவகர் நைனா யாஸ்மீன், தேவகோட்டை சிக்கந்தர் , அஜ்மான் ஷபீஹ் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பஹ்ரைன் சமூக சேவகர் செய்யது ஹனீஃப்பிற்கு அவரின் சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தியர் நலவாழ்வு பேரவையின் அமீரக துணைத் தலைவர் ஏ.எஸ்.இப்ராஹிம், மண்டல நிர்வாகிகள் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன் , சேக் தாவூத் , யாசீன் , மன்னை அமீன் , லால்பேட்டை யாசர் அராஃபத், அன்சாரி , முஜீப் , நியாஸ், கலீபதுல்லாஹ். காயல் இர்ஷாத், முத்துபேட்டை சாதிக், சோனாப்பூர் அயூப் மற்றும் மறவாய்குடி மன்சூர் உள்ளிட்ட பேரவையின் அனைத்து நிர்வாகிகளும் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதிகமான மக்கள் இரத்தக் கொடை செய்தனர். இரத்த தானம் செய்த சகோதர்களுக்கு சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியாக அனைவருக்கும் உணவு எற்பாடு செய்த லால் பேட்டை சகோதர்களுக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் கூறி நிகழ்ச்சி நிறைவு செய்தனர். - நமது செய்தியாளர் காஹிலா