ஷார்ஜா 44வது சர்வதேச புத்தக கண்காட்சியில் நூல் வெளியீடு
ஷார்ஜா: 44வது சர்வதேச புத்தக கண்காட்சியில் பரமக்குடி A.S.இபுராஹிமின் “ஒற்றுமை சாத்தியமே” எனும் நூல் அன்னை ஆயிசா அறக்கட்டளையின் நிறுவனர் S.அப்துல் கபூர் தலைமையில் வெளியிடப்பட்டது. இந்நூலை IWF தலைவர் அபதுல் ஹாதி, S.S.மீரான் பெற்றுக் கொண்டனர். விழாவில் இலங்கை காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், திண்டுக்கல் ஜமால், மன்னர் மன்னன், தொழிலதிபர் ஜாகிர் உசேன், தொழிலதிபர் அன்வர் , Dr.அப்துல் காதர் , இந்திய நலவாழ்வு பேரவையின் துபை, ஷார்ஜா, புஜைரா , அல்ஹுஸ், சோனாப்பூர் மற்றும் அல்அய்ன் நிர்வாகத்தினர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாதிக், சபியுல்லாஹ், அல்ஹுஸ் அய்யுப், ஹசன் முஹம்மது ஆகியோர் செய்திருந்தனர். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். - துபாயிலிருந்து நமது வாசகர் இப்ராஹிம்