ஆருத்ரா சிலம்ப கலைக்கூட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
லண்டனில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்துடன் இணைந்து கத்தாரில் முதன் முறையாக 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு இணையாக 3 கட்டமான சிலம்ப தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற ஆருத்ரா சிலம்ப கலைக்கூட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் ICC, ICBF, ISC, QTS, MKP, OTP, OUTREACH QATAR, என மேலும் பல்வேறு முக்கிய அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பதக்கமும், சான்றிதழும் மாணவ செல்வங்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். இந்த விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தமிழ் உறவுகள் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையில் தொடர்ந்து சாதனை படைத்து உலக விளையாட்டு வரலாற்றில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டது பாராட்டுக்குரியது. ஆருத்ரா சிலம்ப கலைக்கூடத்தின் நிறுவனர் சிலம்பம் சரவணனின் தன்னலமற்ற கலை சேவையை அனைவரும் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர். - தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்