பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இந்திய மாணவர்களுக்கு பாராட்டு
மஸ்கட்: மஸ்கட்டில் மீடியா ஒன் நிறுவனத்தின் சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இந்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். மேலும் மாணவர்கள் மேலும் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்தினார். விழாவில் பள்ளிக்கூட முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றனர். - மஸ்கட்டில் இருந்து நமது வாசகர் முஹம்மது