ஓமன் நாட்டின் மாசிரா தீவு பகுதியில் இந்திய தூதர்
மஸ்கட் : ஓமன் நாட்டின் மாசிரா தீவு பகுதியில் இந்திய சமூகத்தினருடன் இந்திய தூதர் அமித் நாரங் சந்தித்து பேசினார். ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்திய சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்திய தூதர் ஒவ்வொரு பகுதிக்கு நேரடியாக சென்று அங்கு வசித்து வரும் இந்தியர்களிடம் சந்தித்து பேசி வருகிறார். இந்திய தூதர் அமித் நாரங் மாசிரா தீவு பகுதிக்கு சென்றார். அங்கு சென்ற இந்திய தூதர் இந்திய சமூகத்தினர் மத்தியில் பேசினார். அப்போது இந்திய தூதரகம் ஓமனில் வசித்து வரும் இந்திய சமூகத்தினருக்கு தேவையான பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளிட்டவை இருந்தால் அது தொடர்பாக தூதரகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ஓமனில் வசித்து வரும் இந்தியர்கள் ஓமன் நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது என்றார். அப்போது இந்திய சமூகத்தினர் சிலர் தங்களுக்கு இருந்து பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர். அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என தூதர் உறுதியளித்தார். - நமது செய்தியாளர் காஹிலா