துபாயில் தீபாவளி உற்சவம்
துபாய்: துபாயில் இந்தியன் கன்சுலேட் மற்றும் எஃப்.ஓ.ஐ. ஈவெண்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில் தீபாவளி உற்சவம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை இந்தியன் கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்திய பாரம்பரிய நடன, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திய, அமீரகத்தின் நட்புறவை விளக்கும் வகையில் துபாய் போலீஸ் வாத்தியக் குழுவினரின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்கள் வாங்கி ருசித்தனர். நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்று சிறப்பித்தனர். - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா