துபாயில் அமீரக தூய்மைப்பணி முகாம்
துபாய்: துபாய் நகரில் அமீரக தூய்மைப்பணி முகாம் நடந்தது. இந்த முகாம் அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவுடனும், அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் ஏற்பாட்டிலும் நடந்தது. அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். துபாய் நகரின் பர் ருவையா பகுதியில் நடந்த இந்த முகாமில் பள்ளிக்கூட மாணவர்கள், தன்னார்வலர்கள் என 8 ஆயிரத்துக்கும் 500 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றளவில் நடந்த இந்த முகாமின் மூலம் சுமார் எட்டாயிரம் கிலோ எடையுடைய குப்பைகள் சேகரிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த முகாம் சிறப்புடன் நடக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தது.- துபாயிலிருந்து நமது தினமலர் வாசகர் சந்துரு