உள்ளூர் செய்திகள்

துபாயில் தமிழக ஊடகவியலாளருக்கு கோல்டன் விசா

துபாய்: துபாயில் சமூகம் மற்றும் ஊடகப் பணிகளில் செயல்பட்டு வருபவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முதுவை ஹிதாயத். அவர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமீரக அரசு அவருக்கு பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது. கோல்டன் விசா பெற்றுள்ள அமீரக மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துக்கு கே.எம்.காதர் மொகிதீன் சால்வை அணிவித்து வாழ்த்தினார். அப்போது ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி, பேரவை துணைத் தலைவர் அபுதாஹிர் ஃபைஜி, லால்பேட்டை ஃபைய்யாஜ் அஹமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர். - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !