CDF கத்தார் ஏற்பாடு செய்த இலங்கையருக்கான இப்தார் நிகழ்வு
கத்தார் வாழ் இலங்கை சகோதர, சகோதரிகளுக்காக CDF கத்தார் வழங்கிய வருடாந்த இப்தார் நிகழ்வு மார்ச் 8ஆம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதர் ரோஷன் சித்தாரா கான் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும், கத்தார் இஸ்லாமிய அமைச்சின் அவ்காஃப் அழைப்பின் பெயரில், இலங்கை இஸ்லாமிய அறிஞர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சிறப்பு உரையாற்றினார். 2000 பேருக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடை தெரிவித்த மூன்று பேருக்கு மொபைல் போன்கள் பரிசாக வழங்கப்பட்டன. - தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்