பஹ்ரைனில் தூதரக சேவை மையத்தை ஆய்வு செய்த இந்திய தூதர்
பஹ்ரைன்: பஹ்ரைனில் இந்திய தூதரகத்தின் பாஸ்போர்ட், அட்டஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு தூதரக சேவைகளை ஐ.வி.எஸ். மையம் மேற்கொண்டு வருகிறது. இந்த மையம் அமைந்துள்ள டனா வணிகவளாகத்தில் இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் நேரில் ஆய்வு செய்தார். மேலும் அந்த மையத்தின் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்திய சமூகத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் விரைவாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். - நமது செய்தியாளர் காஹிலா