உள்ளூர் செய்திகள்

தோஹாவில் தமிழக மீனவர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் தமிழகம் உள்ளிட்ட இந்திய மீனவர்களுடன் இந்திய தூதர் விபுல் சந்தித்து பேசினார். அப்போது இந்திய தூதரகம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விவரித்தார். இந்திய சமூகத்திற்கு தூதரகம் எல்லா விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்றார்.இந்த கூட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து விவரித்தனர். இந்திய தூதரகத்தின் ஆதரவு இருக்கும் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மீனவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. கத்தார் தமிழ் சங்கம் உள்ளிட்ட இந்திய சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய தூதரக அதிகாரிகள், சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்