அபுதாபி ஹிந்து கோயிலில் இந்திய கல்வி அமைச்சர்
அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபியில் உள்ள பாப்ஸ் ஹிந்து கோயிலுக்கு இந்தியாவின் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்றார்.அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு நடந்தது. மேலும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.அதனையடுத்து கோவிலின் பல்வேறு பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.அப்போது பணிநிறைவடைந்து செல்ல இருக்கும் இந்திய தூதர் சஞ்சய் சுதிர் உடன் இருந்தார்.--- நமது செய்தியாளர், காஹிலா.