இந்திய விடுதலை போராட்ட புகைப்பட கண்காட்சி
பெய்ரூட் : லெபனான் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் போது 1947 ஆம் நடந்த சம்பவங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி நடந்தது.இந்த கண்காட்சியை இந்திய தூதர் நூர் ரஹ்மான் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது இந்தியாவுக்கு அரும்பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார்.பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.-நமது செய்தியாளர், காஹிலா.