கத்தாரில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
தோஹா : கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூதர் விபுல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் தங்களுக்கு இருந்து வரும் பாஸ்போர்ட் பெறுவதில் இருந்து வரும் தாமதம், நிறுவனத்தில் சம்பளம் கிடைக்காமல் இருப்பது, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து புகார்கள் தெரிவித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் தேவையான வழிகாட்டுதல்களை தூதரக அதிகாரிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் பலர் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா