அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரங்கு
அபுதாபி: அபுதாபியில் 33வது சர்வதேச புத்தக கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் இந்திய அரசின் தேசிய புத்தக நிறுவன அரங்கை தூதரக அதிகாரி அமர்நாத் திறந்து வைத்தார். அப்போது இந்திய அரசின் பத்திரிகை, தகவல் மற்றும் கலாச்சாரத்துறையின் அதிகாரி அனிஸ் சகல், தேசிய புத்தக நிறுவனத்தின் இணை இயக்குநர் ராகேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த கண்காட்சியில் இந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி எழுத்தாளர்களின் நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. - நமது செய்தியாளர் காஹிலா