அபுதாபியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா
அபுதாபி ; ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் சஞ்சய் சுதிர் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.சமூகப் பணியில் சிறப்பான சேவைகளை செய்து வரும் முபாரக் முஸ்தபா உள்ளிட்டோருக்கு தூதர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.மேலும் தீவிரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.--- நமது செய்தியாளர் காஹிலா