உள்ளூர் செய்திகள்

ஈராக் எர்பில் நகரில் சர்வதேச யோகா தினம்: இந்திய தூதர் பங்கேற்பு

எர்பில் : ஈராக் நாட்டின் எர்பில் நகரில் உள்ள சமி அப்துல் ரெஹ்மான் பூங்காவில் 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பிரசாந்த் பிசே தலைமை வகித்தார். துணை தூதர் மதன் கோபால் முன்னிலை வகித்தார். யோகா நிகழ்ச்சியில் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். எளிய வகை யோகா பயிற்சிகளை பயிற்சியாளர்கள் மேற்கொள்ள அதனை பின்பற்றி ஆசனங்களை பொதுமக்கள் செய்தனர். யோகா மேற்கொள்வதன் மூலம் உடல் நலனுக்கு ஏற்படும் சிறப்புகள் குறித்து அப்போது விவரிக்கப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்