உள்ளூர் செய்திகள்

பஹ்ரைனில் ஜகந்நாத் ரத யாத்திரை சிறப்பு நிகழ்ச்சி

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் ஜகந்நாத் ரத யாத்திரை சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பஹ்ரைனில் வசித்து வரும் ஒடியா சமூக மக்கள்இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் இந்திய தூதரக அதிகாரிகள் இக்ஜாஸ் அஸ்லம் மற்றும் ரவிகுமார் ஜெயின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாயகத்தில் நடைபெற்ற ஜகந்நாத் ரத யாத்திரையில் பங்கேற்க முடியாதவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவியாக இருந்தது. - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்