உள்ளூர் செய்திகள்

சௌதி அரேபிய கிரிக்கெட் அணிக்கு தலைமை வகிக்கும் இந்தியருக்கு பாராட்டு

ரியாத் : சௌதி அரேபிய கிரிக்கெட் அணிக்கு தலைமை வகிக்கும் இந்தியரான ஹிசாம் ஷேக்கிற்கு இந்திய தூதர் டாக்டர் சுகைல் அசாஜ் கான் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள இந்தியர்கள் பல சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் சௌதி அரேபியாவில் குடும்பத்தினருடன் வசித்து வரும் ஹிசாம் ஷேக் அந்த நாட்டு அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய தூதரகத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டார். அவருக்கு இந்திய தூதர் டாக்டர் சுகைல் அசாஜ் கான் பாராட்டு தெரிவித்தார். மேலும் சாதனைகளை படைக்க வாழ்த்து கூறினார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்