குவைத்தில் முதலாவது ஈ-பாஸ்போர்ட் வழங்கல்
குவைத்: குவைத் இந்திய தூதரகத்தின் சார்பில் முதலாவது ஈ -பாஸ்போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த இந்திய தூதரக அதிகாரி முதலாவது ஈ- பாஸ்போர்ட்டை ஆயிஷா ருமானுக்கு வழங்கினார். ஈ -பாஸ்போர்ட்டானது அந்த நபரின் பயோமெட்ரிக் அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்களை கொண்ட 'சிப்' பொறுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் விமான நிலையங்களில் அந்த பயணிகள் விரைவாக செல்ல உதவியாக இருக்கும். - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா