பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு லெபனானில் இரங்கல்
பெய்ரூட்: லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமை வகித்தார். அவரது தலைமையில் தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய தூதர், தீவிரவாதத்துக்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா