பஹ்ரைனில் மாங்கனி திருவிழா
மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் ஸ்ரீநாத்ஜி இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாங்கனி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய தூதர் வினோத் கே ஜேக்கப் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்றார். இந்திய சமூகத்தினர் விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா