நோய் வாய்ப்பட்ட தமிழக ஹாஜிக்கு NRT மதீனா அயலக அணி உதவி
கன்னியாகுமரி தக்கலையை சேர்ந்த புஸ்ரா பீவி என்கிற பெண் உம்ரா செய்ய மதீனா வருகையின் போது திடீரென இருதய நோய் வாய்ப்பட்டு அல் ஹரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதீனா NRTIA விற்கு தகவல் கிடைத்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை உடனடியாக அயலக அணி நிர்வாகிகள் சென்று பார்த்து தேவையான உதவிகளை செய்தனர். இந்த நிலையில் அவர் ஊருக்கு செல்வதற்கு ஆக்சிஜன் உதவியோடுதான் செல்ல வேண்டும் என்கிற நிலை ஏற்பட்ட போது அதற்கான ஏற்பாடுகளை தூதரக ஜமால் ஜாகிர் ஜெத்தா துணை தூதரகம் மூலம் உடனடியாக தேவையான கோப்புகளை பெற்றார். இந்த விஷயத்தில் மிக சிரத்தை எடுத்து, விமான டிக்கெட் எடுத்து கூடவே அழைத்து சென்றார் சகுபர் சாதிக். அவரை விமான நிலையம் வரை சென்று அயலக அணி நிர்வாகிகள் அபு இன்பன் (NRTIA துணை அமைப்பாளர்) குஜாமுதீன், திருப்பத்தூர் சாதிக் வழியனுப்பி வைத்தனர். - சவூதியிலிருந்து நமது செய்தியாளர் M Siraj