கத்தாரில் இந்திய தூதருடன் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய சமூகத்தினருக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் இந்திய தூதர் விபுல் உடன் நேரடியாக சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த மாத நிகழ்ச்சியில் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு இருந்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவித்தனர். பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்திய தூதரிடம் நேரடியாக தெரிவித்தனர். அவர்களுக்கு இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்திய சமூகத்தினருக்கு ஏற்பட்டு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா