துபாயில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஜெபல் அலி பகுதியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. வரும் 21 ஆம் தேதி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா